" "" "

கீர்த்தி மற்றும் அனிருத் காதல் பற்றி முதல் முதல் பேசிய கீர்த்தியின் அப்பா சுரேஷ்.! அப்படியானால் முற்றுப்புள்ளி தான்.!!

கடந்த சில நாட்களாக கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் ஆகியோர் காதலித்து வருவதாக செய்திகள் வைரலானது. கீர்த்தி மற்றும் அனிருத் இந்த விடயத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அதனால் இந்த காதல் உண்மை தான் என மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டது.

இந்த நிலையில் கிசுகிசுக்களுக்கு கீர்த்தியின் தந்தை சுரேஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர் கீர்த்தியும் அனியும் நல்ல நண்பர்கள், சில திரைப்படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியதால் எப்போதும் ஒன்றாகவே இருந்தார்கள்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதனை சில மீடியாக்கள் தவறாக பதிவேற்றி உள்ளனர். ஆனால் தவறாக எழுதினால் பெரிதாக பேசப் படும், எனவே கீர்த்தி மற்றும் அனிருத் பற்றி பேசவேண்டாம்.

நாங்கள் தற்போது கீர்த்திக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறோம், நல்ல இடம் அமைந்தால் கட்டிக் கொடுப்போம், ஒரு விடயத்தை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள், கீர்த்திக்கும் அனிருத்திற்கும் எந்த காதலும் இல்லை!