" "" "

திருமணமாகி சில நாட்களில் கொடூரமாக கொல்லப் பட்ட இளம் பெண்.! அதிர்ச்சியில் பெற்றோர்.?

திருமணமாகி சில நாட்களில் இளம் பெண் ஒருவர் மர்மமாக கொலை செய்யப் பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆதிரா என்ற பெண்ணே இவ்வாறு கழுத்தறுத்து கொலை செய்யப் பட்டுள்ளார். கடந்த 45 நாட்களுக்கு முன் ஷரத் என்ற இளைஞருடன் ஆதிராவிற்கு திருமணம் இடம்பெற்றுள்ளது.

வெளி நாட்டில் பணி புரிந்து வந்த ஷரத் திருமணமத்திற்கு சில நாட்களுக்கு முன்பு இந்தியா வந்த நிலையில் இருவருக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு சாதாரண முறையில் திருமணமும் நடந்தது.. திருமணத்தின் பின் கணவருடன் ஆதிரா மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். நேற்றைய தினம் ஷரத் உடல் நலக் குறைவால் அவஸ்த்தை பட்ட தனது தந்தையை வைத்தியாசாலைக்கு அலைத்துச் சென்றுள்ளார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதே நேரம் ஆதிராவின் தாய் ஆதிராவை காண வீட்டுக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாக கதவு பூட்டப் பட்டுள்ளதுடன் அயலவர்களும் வீட்டில் யாரும் இல்லை என கூற மகளை காண முடியாமல் ஏக்கத்தில் வீடு சென்றுள்ளார். வைத்தியசாலை சென்று வந்த ஷரத் கதவை உள்ளே சென்றுள்ளார். மனைவியை தேடியவருக்கு குளியல் அறை கதவு நீண்ட நேரமாக மூடி இருப்பதை கண்டு சந்தேகத்தினால் கதவை உடைத்துள்ளார், உள்ளே கழுத்து அறுக்கப் பட்ட நிலையில் ஆதிரா இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

மீட்ட போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து தற்போது பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். யார் வீட்டிற்குள் வந்தார்கள் என்பது தொடர்பாக பொலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்..எப்படி ஆதிரா குளியலறைக்கு சென்றார் போன்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது!