" "" "

வருடத்தின் முதல் சந்திர கிரகணமும் அது பற்றிய முழு விபரமும். எப்போது என்ன செய்ய வேண்டும் இதோ.!

இலங்கையில் சிங்கள மக்களால் விழாவாக கொண்டாடப் படும் வெசாக் பெளர்ணமி தினத்தன்று சந்திர கிரகணம் நிகழ இருப்பதாக தெரிவிக்கப் படுகின்றது. இந்த சந்திர கிரகணம் “இரத்த சந்திர கிரகணம்” என்றழைக்கப் படுகிறது.

இம்முறை இலங்கை மக்களால் அதிகம் எதிர்பார்க்கப் படுகின்ற போதிலும் இம்முறை வெசாக் கொண்டாடத்திற்கு கொரோனா காரணமாக தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணமாக இருக்கும் இதனை இந்திய மக்கள் அனைவராலும் காண முடியாது.

இந்தச் சந்திரகிரகணம் 26-5-2021 ஆம் நாள் மதியம் 2.17 மணி முதல் இரவு 7.19 மணி வரை நிகழவிருக்கிறது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் இந்த சந்திரகிரகணம் தெரியாது, அதனால் கிரகணத்தை சாக்கு வைத்து வெளியே செல்ல வேண்டாம் என கூறப்படுகின்றது.!