வீட்டில் குபேர பொம்மை இருக்கிறதா.? குபேர பொம்மையை எப்படி வைத்தால் அதிர்ஷ்டம் தெரியுமா.!? இதை ஒருமுறை படியுங்கள்..!!
ஹிந்துக்களின் நம்பிக்கையில் முக்கியமான ஒருவராக கருதப் படுகின்றவர் குபேரன். இவரை வீட்டில் வைப்பதால் வீட்டில் குறையாத செல்வம் இருக்கும் என்பது எமது முன்னோர்கள் வழி வந்த நம்பிக்கையாகும். சரி வீட்டில் குபேர சிலையை வீட்டில் எங்கு வைக்க வேண்டும்? அப்படி வைப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் ?
வாங்க பார்க்கலாம்.
குபேர பொம்மையை வாங்கிக் கொண்டு வந்தவுடன் அதற்கான இடத்தை தீர்மானித்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் வைப்பதாக இருந்தால் கிழக்கு திசையில் வையுங்கள். எப்போதும் வீட்டிற்கு அதிக செல்வ செழிப்பை தருவது கிழக்கு திசை தான் அதனால் பூஜை அறையில் கிழக்கு திசையில் குபேர சிலையை வைத்து அருகில் நாணயங்களை வைத்து விடுங்கள்.
இப்படி வைப்பதால் அதிர்ஷ்டம் எப்போதும் உங்களுக்கு கை கொடுக்கும் பணத்தட்டுப் பாடு வராது. அத்துடன் அடிக்கடி ஏற்படும் சண்டைகள் கூட குறைந்துவிடும்..! வீணான செலவுகள் கட்டுப் படுத்தப்படும். அத்துடன் வெற்றி தேடி வரும். பூஜை அறை தவிர்த்து வேறு எங்காவது அதாவது படுக்கை அறை, ஹால் போன்றவற்றில் வைப்பதாக இருந்தால் தென்கிழக்கு திசையில் வையுங்கள்.
இதனால் எதிர்பாராத பண வரவுகள் ஏற்படும். குபேர சிலை வைக்கும் போதும் வழிபடும் போதும் “ஓம் குபேர லட்சுமியாய நம” என வழி பட வேண்டும். இது இந்து சமய நம்பிக்கையாக இருந்தாலும் அறிவியல் ரீதியாக இந்த சிலையை வைப்பது சிறந்ததென கூறியுள்ளனர்.
சிரித்த படி இருக்கும் குபேரன் சிலையை பார்த்துக் கொண்டிருப்பதால் மன அழுத்தம் குறைகிறதாம். அது மட்டுமின்றி நல்ல சிந்தனைகள் உருவாகவும் இந்த சிலை காரணமாக இருக்கிறதாம். மத மொழி வேற்பாடு இன்றி தற்போது பலரது வீடுகளில் குபேர பொம்மையை நீங்கள் காணலாம்..!!