வெட்டு காயங்கள், தீக்காயங்கள், சொரி, சிரங்கு,உட்பட அனைத்திற்கும் ஒரே வாரத்தில் தீர்வு..! இந்த எண்ணெய் பயன்படுத்துங்கள்..!

இயற்கை மருத்துவங்கள் எம் அருகிலேயே இருந்தாலும் நாம் கண்டுகொள்வதில்லை, காரணம் கெமிக்கல் கலந்த செயற்கை விடயங்களுக்கு பழகிப் போய்விட்டோம், எம் தாத்தா பாட்டி காலத்தில் விதவிதமான கிரீம்கள், மருத்துவங்கள் இப்படி எதுவும் இருக்கவில்லை, ஆனால் அவர்கள் முகத்தில் பரு, உடலில் ,சொறி, சிரங்கு இருக்கவில்லை, அடி பட்ட காயமாக இருந்தாலும் பிரசவ வலியாக இருந்தாலும் இயற்கை தான் அவர்களுக்கு டாக்டராக செயற்பட்டது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அன்றைய அளவிற்கு இன்று மூலிகை செடிகள் இல்லை, அவற்றை அழித்து நாம் குடியேறிவிட்டோம். ஆனால் இருப்பதை கூட பயன்படுத்துவதில்லை என்பது தான் சோகமான விடயமாகும். அட ஆமாங்க “குப்பைமேனி” செடி இது இல்லாத கிராமங்களே இல்லை, பலரது வீட்டிலும் இந்த செடி இருக்கிறது. ஆனால் நாம் கண்டுகொள்வதில்லை.

இன்று நாம் இந்த செடியின் பயன் பற்றித் தான் பார்ககப் போகிறோம். சொரி, சிரங்கு மட்டும் இன்றி முகத்தில் இருக்கும் பரு, உட்பட பலவற்றிற்கு குப்பைமேனி மருந்தாகிறது. அத்துடன் சளி, இருமல், அடிபட்ட உள்காயங்கள் தீக்காயங்கள், உட்பட ஏராளமான நோய்களுக்கு குப்பை மேனியை தவிர சிறந்த மருந்து இல்லை. குப்பை மேனியை எப்படி இந்த நோய்களுக்கு பயன் படுத்தலாம்..வாங்க பர்க்கலாம்..!

குப்பை மேனி இலைகளை எடுத்து நன்றாக கழுவி தண்ணீர் சேர்க்காமல் அரைத்து அதனை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் எவ்வளவு குப்பைமேனி சாறு எடுத்துள்ளீர்களோ அதே அளவு நல்லெண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாக கலந்துகொள்ளுங்கள்.

இதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நன்றாக கொதிக்க வைய்யுங்கள். இது வெடித்துக் கொண்டே இருக்கும் இந்த வெடிப்பு சத்தம் குறைந்ததும் இறங்கி ஆற வைத்து கண்ணாடி போத்தலில் பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். மேல் குறிப்பிட்ட நோய் இருந்தால் இந்த எண்ணெயை பயன்படுத்தி வாருங்கள். ஒரே வாரத்தில் சிறந்த பலன் கிடைத்து விடும்..!!