ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ள பிரபல பாடகி லதா மங்கேஷ்கர்..! இதற்காக தானாம்..!!

90 வயதான பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் அண்மையில் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது ரசிகர்கள் பலரும் அவர் உடல் நலம் தேறி நலமுடன் திரும்ப பல பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

தீவிர சிகிச்சைப் பிரிவில் கிட்டத்தட்ட ஒரு மாத சிக்கிச்சையின் பயனாய் உடல் நலம் தேறிய நிலையில் லதா மங்கேஷ்கரை வீட்டுக்கு செல்ல வைத்தியர்கள் அனுமதியளித்துள்ளார்கள்.

வீடு திரும்பிய பாடகி லதா மங்கேஷ்கர், தன் உடல் நலத்தில் கவனம் செலுத்தி சிகிச்சை அளித்த வைத்தியர்களுக்கும் தனக்காக பிரார்த்தனைகள் செய்து வந்த ரசிகர்களும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.