" "" "

லாக்டவுன் நேரத்தில் மார்டன் உடையில் அசத்தும் “சொல்வதெல்லாம் உண்மை” புகழ் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் வைரலாகும் புகைப்படங்கள் இதோ.!!

“சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியின் மூலம் உலக அளவில் வாழும் தமிழர்கள் மத்தியில் பிரபலமானவர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன். திரைப்பட நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், பல திறமைகளுக்கு சொந்தகாரரான லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனை மக்கள் வெறும் நிகழ்ச்சி தொகுப்பாளராக மட்டுமே அடையாளப் படுத்தினார்கள். காரணம் சர்ச்சைகள் பல சந்தித்த “சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியின் வெற்றி தான்.!

சினிமாவை தாண்டி லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் சிறந்த சமூக சேவகி, பெண்களுக்கு எதிரான பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் இவர் பாதிக்கப் படும் பெண்களுக்கு சட்ட ரீதியாகவும் உதவி செய்து வருகின்றார். வனிதாவின் மூன்றாவது கணவர் பீட்டர் பாலின் மனைவிக்கு உதவச் சென்று வனிதாவிடம் திட்டு வாங்கியதும் அவரது சேவை மனப் பான்மையால் தான்.

இவை ஒரு பக்கம் இருக்க லாக்டவுன் காலத்திலும் பிஸியாக இருக்கிறார் லக்‌ஷ்மி. அண்மையில் நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள தயாராகிய லக்‌ஷ்மி மாடர்ன் ஆடையில் சென்றுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பேரப் பிள்ளைகளும் கண்ட பின் மார்டன் ஆடை தேவையா என கிண்டல் அடித்து வருகின்றனர். இதோ வைரலாகும் புகைப்படங்கள்!!