" "" "

5 மாத லாக் டவுனில் 7000 மாணவிகள் கர்ப்பம்..! நாட்டில் அதிகரித்துள்ள பாலியல் வன்கொடுமைகள்..!!

லாக் டவுணால் 5 மாதங்கள் பாடசாலைகள் மூடப் பட்ட நிலையில் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பமாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான மாலவியில் இந்த கொடுமை நடந்துள்ளது. உலகம் முழுவதும் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக அனைத்து நாடுகளும் லாக் டவுன் செய்யப் பட்டது,

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மாலவி நாடும் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவித்ததுடன் நடு தழுவிய ஊரடங்கு சட்டத்தையும் அமுல் படுத்தியது. இந்த நிலையில் மாலவி நாட்டில் 10 வயது தொடக்கம் 14 வயதுக்கு கீழ் உள்ள சுமார் 7 ஆயிரம் மாணவிகள் கர்ப்பமாகி உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனை குறித்த நாட்டு அரசு மற்றும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கு பலோம்பே என்றழைக்கப் படும் பகுதியில் மட்டும் 1000ம் சிறுமிகள் கர்ப்பமாகி உள்ளனர். இது பற்றி கல்வி தொடர்பான சிசில் சொசைட்டி கூட்டணியின் இயக்குனர் பெனடிக்டோ கோண்டோவ் கருத்து தெரிவிக்கையில் லாக் டவுண் பெண்களின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டது. பாலியல் சீண்டல்கள், பலாத்காரம், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளது.

இங்கு மட்டும் அல்ல எல்லா நாடுகளிலும் இதே கொடுமை நடந்துகொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார். மற்றைய நாடுகளை விட கென் யாவில் மாணவிகள் கர்ப்பமாக இருப்பது அதிகம் என கூறப்படுகின்றது. கென் யாவில் 1000 பேரில் சுமார் 82 சிறுமிகள் கர்ப்பமாக இருப்பதாக தெரியவருகின்றது..!!