" "" "

இறுதியாக தந்தையின் முகத்தை பார்க்க முடியாமல் தவிக்கும் லொஸ்லியா.! இலங்கை அரசின் சட்டமும் காரணமாம்.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நிலையான இடம் பிடித்தவர் நடிகை லொஸ்லியா. தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் லொஸ்லியாவின் தந்தை 15ம் திகதி மாரடைப்பால் கனடாவில் மரணமடைந்தார்.

இவரது சடலம் இன்று அல்லது நாளை இலங்கை எடுத்துச் செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இருக்கும் லொஸ்லியாவும் இலங்கை செல்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்டது. இந்த நிலையில் லொஸ்லியா இலங்கை சென்றாலும் தந்தையின் சடலத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கட்டுப் பாடுகளை அதிகரித்துள்ளது. இதனால் வெளி நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அனைவரையும் 14 நாட்கள் தனிமை படுத்தி pcr பரிசோதனை முடிந்த பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கின்றனர். அதன் படி லொஸ்லியா இலங்கை சென்றால் 14 நாட்கள் தனிமை படுத்தப் படுவார்,

இப்படி நடந்தால் லொஸ்லியாவால் அவரது தந்தையின் சடலத்தை இறுதியாக பார்க்க முடியாமல் போய்விடும். தந்தையின் மீது உயிரையே வைத்திருந்த லொஸ்லியாவிற்கு இறுதியாக அவரது சடலத்தை கூட பார்க்க முடியாதது கொடுமை என பலரும் கூறி வருகின்றனர் !