" "" "

தந்தையின் மரணத்திற்காக இலங்கை வந்துள்ள லொஸ்லியா.! வைரலாகும் பதிவு இதோ.!!

பிக் பாஸ் நிகழ்ச்சியினால் புகழின் உச்சத்திற்கு சென்றவர் லொஸ்லியா. இலங்கையில் இருந்து சென்னை வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்டார். அண்மையில் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

இவரது மரணம் இயற்கை மரணம் என கனடா அரசு மருத்துவ சான்றிதழ் கொடுத்த நிலையில் மரிய நேசன் அவர்களின் உடலை இலங்கை கொண்டுசெல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில் இதுவரையில் இந்தியாவில் இருந்த லொஸ்லியா நேற்றைய தினம் இலங்கை சென்றுள்ளார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

தந்தையின் மரணத்திற்காக தாய் சகோதரிகளுக்கு ஆறுதல் கூற இலங்கை சென்றபோதும் யாரையும் சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை சட்டத்தின் படி 14 நாட்கள் தனிமை படுத்தப் பட்டுள்ள லொஸ்லியாவிற்கு தந்தையின் சடலத்தை பார்க்க முடியுமா என்பது சந்தேகமே.

இருப்பினும் சடலம் 14 நாட்களுக்குள் வராவிட்டால் பார்க்கலாம் என்று கூறப்படுகின்றது. எதுவாகினும் லொஸ்லியாவின் குடும்பத்தினர் தைரியமாக இருக்க வேண்டிய நேரமிது.!!