" "" "

தந்தையின் மரணத்தை அடுத்து லொஸ்லியாவை தொடரும் சோகங்கள்.! 4 சுவற்றிற்குள் கதறி அழும் லொஸ்லியா..!!

பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு பிரபலமானவர் லொஸ்லியா. ரசிகர்களை மனதை வென்ற இவரை தொடர்ந்தும் சோகங்கள் துரத்திக்கொண்டிருக்கின்றது. கடந்த 15ம் திகதி லொஸ்லியாவின் தந்தை கனடாவில் மரணமடைந்தார். இவரது சடலத்தை இலங்கை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகிறது, இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு லொஸ்லியா இந்தியாவில் இருந்து இலங்கை சென்றார்.

தாய் மற்றும் தங்கைகள் தந்தையை இழந்து தவிப்பதால் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக இலங்கை சென்ற இவர் ஆறுதல் இன்றி தவித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சென்னையில் லொஸ்லியாவிற்கு pcr பரிசோதனை நடத்தப் பட்டு கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதிபடுத்தப் பட்டது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இருப்பினும் இலங்கை சட்டத்திற்கு அமைய 14 நாட்கள் தனிமை படுத்துவது கட்டாயமாக்கப் பட்டது. இந்த நிலையில் லொஸ்லியாவை சுய தனிமை படுத்தலில் வைத்திருப்பார்கள் என்று நினைத்திருக்க அவரை ஹோட்டல் ஒன்றில் தனிமை படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. தந்தையை இழந்து யாருடையதாவது ஆறுதல் தேவையான நேரத்தில் 4 சுவற்றுக்கு நடுவில் தனிமையில் இருப்பது என்பது மிகப் பெரிய கொடுமையாகும்.

தனிமை படுத்தலில் இருக்கும் லொஸ்லியா தனது தோழிகளுக்கு அழைப்பினை ஏற்படுத்தி கதறி அழுவதால் அவர்களும் செய்வதறியாது தவித்து வருகின்றனர். ஒரு சோகம் முடியும் முன் தனிமை படுத்தல் என்பது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.!!