" "" "

“அம்மா, தங்கைகளுக்கு என்ன சொல்லப் போகிறேன், அவர்களை எப்படி பார்க்கப் போகிறேன்” தந்தையின் மரணத்தால் கதறி துடிக்கும் லொஸ்லியா.! சோகத்தில் ரசிகர்கள்.!!

பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் மைனாம்மாவாக வலம் வந்தவர், நடிகை லொஸ்லியா. இவரது தந்தை கடந்த 15ம் திகதி கனடாவில் மாரடைப்பால் மரணமடைந்த நிலையில் அவரது சடலத்தை வீட்டுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக விமான போக்குவரத்து இன்மையால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக இலங்கையில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ள நிலையில் சடலத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இந்த நிலையில் திரைப்படங்களில் நடிப்பதற்காக இந்தியா வந்திருக்கும் லொஸ்லியா இலங்கை செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. லொஸ்லியா இலங்கை செல்வதற்கான ஏற்பாடுகளை விஜய் தொலைகாட்சி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நடிகையும் லொஸ்லியாவுடன் நெருக்கமாக இருப்பவருமான வனிதா விஜயகுமார் கூறுகையில் நான் லொஸ்லியாவுடன் பேசினேன் அவள் அழுதுகொண்டே இருக்கிறாள், அழுகையை நிறுத்த முடியவில்லை. அவள் இலங்கை செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

தந்தையின் சடலம் வருவதில் தான் தாமதம் ஏற்படும் என்று கூறப்படுகின்றது. எப்படி தாய் தங்கைகளுக்கு ஆறுதல் சொல்லப் போகிறேன், அப்பா இல்லாத வாழ்க்கையை அம்மா எப்படி வாழப் போகிறார், தங்கைகளுக்கு என்ன சொல்லப் போகிறேன், என கதறுகிறாள், எங்களால் அவளை சமாதானப் படுத்துவது கடினமாக உள்ளது என வனிதா கூறியுள்ளார்.!