" "" "

“எனக்கு எல்லாமே என் தந்தை தான் “தந்தையின் பிரிவில் கதறி அழுத லொஸ்லியா, வைரலாகும் கண் கலங்க வைக்கும் வீடியோ!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர்களில் லொஸ்லியாவும் ஒருவர். நடிகை ஓவியாவிற்கு பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானவர் என்றால் லொஸ்லியா தான். செய்தி வாசிப்பாளராக இருந்த லொஸ்லியா தற்போது நடிகையாக இருக்க காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக் பாஸ் வீட்டிற்குள் லொஸ்லியாவின் கடந்து வந்த பாதை மற்றும் யாரை மிஸ் செய்கிறீர்கள் என கேட்டபோது 5 நிமிடத்திற்கு மேலாக தனது தந்தை பற்றியே பேசி இருந்தார். தங்களை வளர்க்க தனது தந்தை பட்ட கஷ்டங்களை பகிர்ந்து கொண்ட லொஸ்லியா தனது ஆயுளையும் சேர்த்து தனது தந்தை நீண்ட காலம் வாழ வேண்டும் என்று அழுதார்.

10 வருடங்களாக கனடாவில் வாழும் தந்தையை அதிகம் மிஸ் செய்வதாக கூறி அன்று அழுத லொஸ்லியாவின் தந்தை இன்று நிஜமாகவே இல்லை. பிக் பாஸ் போட்டியாளர்களில் எம் வீட்டு பெண்ணாக நாம் ரசித்த லொஸ்லியா வீட்டிற்குள் தன் தந்தை தான் எல்லாமே என பலமுறை கூறியுள்ளார்.

இன்று தனது தந்தையின் மறைவு கண்டிப்பாக அவருக்கு மிகப் பெரிய இழப்பாகும். தந்தையை இழந்து தவிக்கும் லொஸ்லியாவிற்கு பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது லொஸ்லியா பேசிய கண்ணீர் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதோ வீடியோ.!!