லொஸ்லியாவை திட்டுவதற்கு தயங்கும் தாய்..! கண்முன்னே இறந்த மகளை போல் லொஸ்லியாவையும் இழந்து விடுவோம் என்ற பயம் தான் காரணமாம்..!

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி அனைவரின் கண்களையும் குளமாக்கியதறகான காரணம் லொஸ்லியாவின் குடும்பத்தினரின் வருகை தான். லொஸ்லியாவின் இரண்டு தங்கைகளுடன் தாயார் வர சிறிது நேரத்தின் பின் அவரது தந்தையும் வந்தார். மகளை முதலில் திட்டி தீர்த்த தந்தை பின்பு அன்பாக அனைத்துக் கொண்டார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

முழு குடும்பமுமே கண்ணீர் விட்டு அழுத நேரம் தான் அதிகமாக இருந்தது. ஆரம்பத்தில் திட்டிய தந்தை பின் ஆறுதலாக பேச ஆரம்பித்தார். ஆனால் லொஸ்லியாவின் தாய் மகளை கட்டிப் பிடித்து அழுதுகொண்டே இருந்தார். உன்னால் தான் தலை நிமிர்ந்து இருந்தோம் ஆனால் உன்னால் தலை குனிந்து விட்டோம்.

உன்னைப் பற்றி எனக்கு தெரியும் நீ நீயாக இரு என அழுதுகொண்டே இருந்தார். பின் தாய் தந்தை இருவரும் லொஸ்லியாவை புகழ்ந்து தான் பேசினார்கள்.. அவர்களுக்கு உள்ளுக்குள் பயம் இருப்பதை அனைவருக்கும் உணர கூடியதாக இருந்தது. லொஸ்லியா வீட்டில் 4 பெண் பிள்ளைகள். இதில் லொஸ்லியாவின் அக்கா அம்மா திட்டியதால் தற்கொலை செய்துகொண்டார். லொஸ்லியா இது நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

திட்டிவிட்டு மகளை சமாதானம் செய்யாமல் போனால் ஏதும் தவறான முடிவு எடுத்துவிடக் கூடும் என்ற பயம் பெற்றவர்களுக்கு இருந்ததால் சமாதானம் செய்து முடித்து விட்டனர். இருப்பினும் லொஸ்லியா ஆர்மியினர் பயந்த போய் உள்ளனர். லொஸ்லியாவின் தந்தை அனைவர் முன்னிலையிலும் திட்டியது தவறு என கூறி வருகின்றனர்..!