" "" "

அன்பு “ஹேங்”கில் முதல் சண்டை ஆரம்பம்.!! கேப்ரியலா நிஷா இடையே முரண்பாடு.! இவரால் தான் சண்டையாம்.! ஆதாரம்.!!!

பிக் பாஸ் வீட்டில் இருந்து 5 லட்சம் ரூபாயுடன் வெளியேறியவர் கேப்ரியலா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து வந்த கேப்ரியலா ஹீரோயினாக முயற்சி செய்து வந்த நிலையில் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ஆரம்பத்தில் மிக்ஸர் போல் இருந்தாலும் பின் தனித்து தெரிய ஆரம்பித்தார். பாலாஜியை காதலிக்க ஆரம்பித்த போது பாலாஜி நீ என் தங்கை போல் என கூறினார். இதனால் கடுப்பான கேபி அன்பு குரூப்பில் இணைந்தார். பின் சோம் சேகருடன் கேபி நெருக்கமாக அவரை தான் காதலிப்பதாக அனைவரும் நினைத்தனர். கேபியும் சோம் சேகருடன் மிகவும் நெருக்கம் காட்டினார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஆனால் சோம் சேகருக்கு ரம்யா பாண்டியன் மீது ஒரு லவ் இருந்ததால் தற்போது கேபி மீண்டும் பாலாஜி பக்கம் திரும்பியுள்ளார். 5 லட்சத்துடன் வெளியே வந்த கேப்ரியலா பாலாவை மிகவும் பிடிக்கும் என கூறி இருந்தார். இந்த நிலையில் கேப்ரியலா தனது அன்பு குரூப்பில் இருக்கும் நிஷாவுடன் பிரச்சனை என்று கூறப்படுகின்றது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த நிஷா கேப்ரியலாவை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்ந்தார். ஆனால் கேபியோ அர்ச்சனா, ரியோ, சோம், ஆஜித்,ரமேஷ் மற்றும் பாலாஜி ஆகியோரை மட்டுமே பின் தொடர்ந்துள்ளார்.

தன்னை பின் தொடராதவர்களை கூட இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்ந்திருக்கும் கேபி நிஷாவை பின் தொடராததற்கு ரியோவும் காரணம் என்று சொல்லப் படுகின்றது. ரியோவில் அதிகம் பாசம் காட்ட வேண்டாம் என நிஷா கூற இதனால் கடுப்பான கேபி நிஷாவுடன் அளவாக பேசி வருகிறாராம்.!