" "" "

மலாலாவிற்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுத்த தீவிரவாதிகள்.! இம்முறை உயிர் தப்ப முடியாது என பகிரங்க சவால்.!!

பெண்களின் கல்விக்காக 16 வயதில் இருந்து குரல் கொடுத்து வருபவர் பாகிஸ்தனை சேர்ந்த மலாலா யூசுப். முஸ்லீம் பெண்கள் கல்வியில் பின் தங்க குடும்பத்தினரே காரணம் என்றும், முஸ்லீம் பெண் குழந்தைகளுக்கு கல்வி கட்டாயம் என்றும் மலாலா பேசிய போது ஒட்டுமொத்த உலகமுமே திரும்பி பார்த்தது.

இதற்காக இவருக்கு நோபல் பரிசும் கிடைத்தது. ஆனால் மலாலாவை தாலிபான் தீவிர வாதிகளுக்கு பிடிக்கவே இல்லை. முஸ்லீம் பெண்களை தவறாக வழி நடத்துவதாக கூறி மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். மரணம் வரை சென்று மீண்டார் மலாலா.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

மலாலா மீதான தாக்குதலை நடத்திய இசானுல்லா இசான் கைது செய்யப் பட்டார். ஆனால் பொலீஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்று விட்டார். இந்த நிலையில் மீண்டும் டுவிட்டரில் மலாலாவை தொடர்பு கொண்ட இசானுல்லா மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அ

தில் “கடந்த முறை மிஸ் ஆகி விட்டது, இம்முறை கண்டிப்பாக உன் மரணம் நிச்சயம்” என குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் கேள்வி எழுப்பிய மலாலா பொலீஸ் பிடியில் இருந்து எப்படி தப்பிச் சென்றான்.? ஏன் அவனை கைது செய்ய முயற்சி செய்யவில்லை, என் உயிருக்கு என்ன பாதுகாப்பு என கேட்டுள்ளார்.