" "" "

பெண்களை போல் குட்டை பாவாடை, T, சார்ட் அணிந்து வந்து பாடம் நடத்தும் ஆசிரியர்கள்! உலகையே வியக்க வைத்த காரணம்.!!

ஆடைகளே ஆண் பெண் வேறுபாட்டை வெளிப்படுத்துகிறது என கூறி பள்ளிக்கு குட்டை பாவாடை அணிந்து வந்த சிறுவனை மன நோயாளி என கூறி பள்ளியை விட்டு நீக்கிய நிர்வாகத்தை கண்டித்தும், சிறுவனுக்கு ஆதரவாகவும் ஆசிரியர்கள் சிலர் பள்ளிக்கு குட்டை பாவாடை அணிந்து வந்து பாடம் நடத்தி வருகின்றனர். ஆண் பெண் என எதனை கொண்டு பிரிக்கின்றீர்கள், ஆண்களும் பெண்களும் எப்போது சரி நிகரானவர்களே, இவள் பெண் என அவள் ஆடையை வைத்து தீர்மானித்து அவளுக்கு தொல்லை கொடுக்கின்றீர்கள்,

நான் பெண்களின் ஆடையை அணிந்து பள்ளிக்கு வருவேன், ஆடையை வைத்து பெண்களை வேறுபடுத்தாதீர்கள் என குறித்த சிறுவன் கூறியதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சிறுவன் மன நலம் பாதிக்கப் பட்டிருப்பதாக கூறி பள்ளியை விட்டு நீக்கியது. ஆனால் சிறுவன் டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டதுடன் நான் நல்ல மன நிலையில் இருக்கிறேன், ஆடையை வைத்து சக தோழியை, என் சகோதரியை, என் அம்மாவை நீங்கள் கேலி கிண்டல் செய்வதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது.

உண்மையான ஆண்மகனால் அதனை செய்ய முடியாது. நான் உண்மையான ஆண் மகன், பெண்களை ஆடைகளில் நீங்கள் பிரித்தால் அவர்கள் அணியும் ஆடையை நானும் அணிந்துகொள்வதில் கவலை இல்லை எனக்கு என தெரிவித்து வீடியோவை வெளியிட்டார். இதனை பார்த்த பலரும் சிறுவனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அத்துடன் சிறுவன் படித்த பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் சிறுவனுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக குட்டை பாவாடை அணிந்து சென்றனர்.

இதனை தொடர்ந்து பள்ளியின் இளம் ஆசிரியர்களானா மேனுவேல், ஓர்டிகா, ஜோஸ், பினாஸ், போர்ஜா உட்பட பல ஆசிரியர்கள் பெண்கள் அணியும் குட்டை பாவாடை அணிந்து பள்ளிக்கு வந்து பாடம் நடத்தினார்கள். தொடர்ந்தும் பாடம் நடத்தி வருகின்றனர். இவர்களின் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து பல இளைஞர்கள் குட்டை பாவாடை அணிந்து குறித்த சிறுவனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.!!