மலேசியாவில் இன்று 99 ஜோடிகள் மணமுடித்தனர்…!!!

மலேசியாவில் கோலாலம்பூரின் தியென் ஹோ கோவிலில் 99 ஜோடிகள் இன்று மணமுடித்தனர். இன்றைய தினம் ஒன்பதாம் மாதத்தின் ஒன்பதாவது நாள். உள்ளூர்ச் சீனர்கள் அதனை மங்களகரமான நாளாகக் கருதி 99 ஜோடிகளுக்கு மிக விமர்சனமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

சீன மொழியில் ஒன்பது என்ற சொல்லை உச்சரிக்கும் போது ‘நீடுடி வாழ்க’ என்ற சொல்லுடன் ஒத்துப் போவது அந்த நம்பிக்கைக்கான காரணம். இந்த ஜோடிகள் கறுப்பு மற்றும் வெள்ளை போன்ற நிற ஆடைகளை அணிந்து கொண்டு எழிலாகப் பவனி வந்தனர். ஒரு சிலர் சிவப்புநிற ஆடைகளை அணிந்தும் வந்துள்ளனர்.

ரோஜா மலர் செண்டுகளை ஏந்தியவாறு ஜோடிகள் உறுதிமொழி வழங்கிய நிலையில் ஆசி பெற்றுக்கொண்டனர்.