" "" "

கொரோனாவை விரட்ட மஞ்சள் பாவிக்கின்றீர்களா.? ஆபத்து எச்சரிக்கையாக இருங்கள்..!!

உலகளாவிய ரீதியில் பரவி ஏராளமான உயிர்களை பறித்த தொற்று நோய்களின் வரிசையில் கொரோனா வைரஸும் இணைந்துகொண்டுள்ளது. ஏற்கனவே உலகில் தொற்று நோய்கள் பரவி இருந்தாலும் இந்த தலைமுறைக்கு கொரோனா வைரஸ் தான். கொரோனா வைரஸை உலகில் இருந்து முற்றாக அழிக்க முடியாது என்று “உலக சுகாதார அமைப்பு” தெரிவித்துள்ளது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

கொரோனா வைரஸை கட்டுப் படுத்த மருத்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. எது எப்படி இருந்தாலும் எமது வில்லேஜ் விஞ்ஞானிகளும் புதிது புதிதாக மருந்து கண்டு பிடிக்கின்றனர்.அப்படி சிலர் கண்டு பிடித்தவை தான் வசம்பு உரசி கட்டுவது, பெருங்காயம் இடுப்பில் கட்டுவது, மஞ்சள் பூசுவது, வேப்பம் இலை கட்டுவது போன்றவை.

இதனால் வசம்பு, பெருங்காயம் , அத்துடன் மஞ்சள் போன்றவற்றின் விலை வேகமாக அதிகரித்தது. குறிப்பாக இலங்கையில் ஒருகிலோ மஞ்சளின் விலை 3 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் மஞ்சள் பயன்படுத்துவது ஆபத்து என இலங்கை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை சுகாதார துறையினர்:

அண்மையில் விற்பனை செய்யப் பட்ட மஞ்சளில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து பரிசோதனை செய்த போது கலப்படங்கள் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. மஞ்சளில் மா, மற்றும் கலரிங் போடப் படுகின்றது. மஞ்சள் யாரும் அதிகம் உணவில் சேர்க்க கூடாது, இது நோய்களை ஏற்படுத்தும், இப்படி இருக்கையில் மக்கள் கலப்படம் நிறைந்த மஞ்சளை பாவிப்பது ஆபத்து என தெரிவித்துள்ளனர்..!