" "" "

லொஸ்லியாவின் தந்தை மரியநேசனின் மரணத்திற்கான உண்மை காரணத்தை வெளியிட்ட கனடா அரசு.!! சடலம் இலங்கை வர இத்தனை வாரங்களா.!?

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப் பட்ட சீசன் என்றால் அது சீசன் 2 மற்றும் 3 தான். இந்த இரண்டு சீசன்களிலும் போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடி இருந்தார்கள். காதல், கண்ணீர், சண்டைகள் என அனைத்தும் இருந்தாலும் சுவாரசியமான டாஸ்குகள் செய்து ரசிகர்களை மகிழ வைத்தனர். சீசன் ஒன்றில் லொஸ்லியா ரசிகர்களின் மனம்கவர்ந்தார், சீசன் 3ல் லொஸ்லியா.

சாதாரண குடும்பத்தில் பிறந்த லொஸ்லியா தனது முயற்சியினால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சியில் லொஸ்லியாவுடன் இணைந்து பிரபலமானவர் தான் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன். பிக் பாஸ் வீட்டில் கவினின் காதலில் சிக்கியதால் லொஸ்லியாவை திட்டி தீர்த்தார். ஆனால் கவினுடன் மரியாதையாக நடந்துகொண்டார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதனாலேயோ என்னவோ அவரை அனைவருக்கும் பிடித்துப் போனது. நல்லவர்கள் பூமியில் வாழமாட்டார்கள் என்பது போல் கடந்த 15ம் திகதி அறையில் தூங்கிய நிலையில் மரியநேசன் மரணமடைந்தார். இவரது மரணம் மாரடைப்பால் ஏற்பட்டராக கூறப்பட்டாலும் கனடா அரசின் சான்றிதழ் வேண்டுமாக இருந்தது. இதனால் பிரேத பரிசோதனை செய்யப் பட்ட நிலையில் மாரடைப்பால் மரணமானது உறுதியானது.

கனடா அரசு மரியநேசனின் மருத்துவ அறிக்கையை இயற்கை மரணம் என வெளியிட்டது. இந்த நிலையில் மரியநேசன் அவர்களின் உடல் இலங்கைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்கள் ஆகும் என கூறப்படுகின்றது. கொரோனா வைரஸ் காரணமாக தடங்கல்கள் ஏற்படுவதாக கூறப்பட்டுள்ளது.!