" "" "

திருமண கனவோடு காத்திருந்த இளம் பெண்..! பின் நடந்த பதற வைக்கும் கொடூரம் .!!

இலங்கையில் நேற்று காலை சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் நான்கு விமான படை வீரர்கள் மரணமடைந்தனர். ஹப்புத்தளையில் சென்றுகொண்டிருக்கும் போது விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விழுந்து நொறுங்கியது இதில் இறந்த நால்வரில் கம்பளை பிரதேசத்தை சேர்ந்த லெப்டினன்ட் கே.எம். எல் குலதுங்க என்ற இளைஞனும் மரணமடைந்தார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இது தொடர்பாக இன்று அவரது சகோதரர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது விமானியாக வேண்டும் என்பது என் தம்பியின் கணவாக இருந்தது. அவனது கனவு கடந்த மூன்று வருடங்களுக்கு முன் நிறைவேறியது. இதனால் தம்பி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அத்துடன் நேற்றைய தினம் கால் செய்து மாலை விடுமுறையில் வருவதாக கூறினான்.

இதனால் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தோம். அத்துடன் தம்பி யுவதி ஒருவரை காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் மார்ச் மாதம் திருமணம் நிச்சயம் செய்யப் பட்டிருந்தது. இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில் தம்பியின் மரணம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

இந்த சம்பவம் பற்றி அறிந்த காதலித்த பெண் உடைந்து போய் உள்ளார். அவரால் தம்பியின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை, என தெரிவித்துள்ளார். திருமண கனவோடு இருந்த குறித்த யுவதி இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என கம்பளையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன…!!