திருமணத்திற்கு தயாராகும் பெண்களா நீங்கள்..!? கண்டிப்பாக படியுங்கள் பகிருங்கள்…!

பெண்களே உங்கள் திருமணத் திகதி குறிக்கப்பட்டதுமே திருமணத்திற்கு தயாராகி விடுங்கள். அந்த வைபோகத்தின் அனைத்துக் கொண்டாட்டங்களிற்கும் உங்களை  உடல், மன ரீதியாகத் தயார் படுத்திக் கொள்ளுங்கள்.  திருமணத் திகதிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே பெண்கள் தங்கள் அழகில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது சிறப்பானது.அந்த வகையில் திருமண நாளை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்ற மணப் பெண்ணிற்குத் தேவையான அழகு தொடர்பான குறிப்புக்களை வழங்குவது சாலச் சிறப்பு.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

நிறம் குறைந்த பெண்கள்,பொதுவாக நிறம் குறைந்த பெண்கள் 15 நாட்களுக்கு  ஒருமுறை முகத்திற்கு ப்ளீச், வைட்னிங், பேசியல் செய்து வந்தால் திருமணத்தன்று மிகவும் நேர்த்தியான அழகோடு தெரிவார்கள். திடீரென திருமணத்திற்கு சில தினங்களுக்கு முன்பு இவற்றைச் செய்யும்போது ஒத்துப்போகாத தன்மையே அதிகம் காணப்படுகின்றது.உரோமங்களை நீக்குதல், பெண்களுக்கு கால், கைகளில் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

அவர்கள் வெக்ஸிங், திரெட்டிங் மூலமாக கை, கால்களில்  உள்ள வேண்டாத உரோமங்களை நீககிவிடலாம். இதை திருமணத்திற்கு சமீமாக செய்யாமல் முன்பே செய்தால் வலி, வீக்கம் ஆகியன இல்லாமல் இருக்கும்.
கை, கால் அழகை மெருகேற்றிக் கொள்ளுங்கள்.என்னதான் இயற்கையாக இருப்பதுதான் அழகென்று சொல்லிக் கொண்டாலும் திருமணத்தன்று உங்கள் கை, கால்கள் நேர்த்தியாக இருந்தால்தானே அழகு!

அதற்கு நீங்கள் கண்டிப்பாக பெடிக்கியுர், மெனிக்கியுர் ஆகியவற்றைச் செய்யவேண்டும். இதை அழகு நிலையத்திற்குச் செயன்றுதான் செய்ய வேண்டும் என்றில்லை. நீங்களே வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டு செய்யலாம்.இறுக்கமான சருமத்துக்கு சிகிச்சை, முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ளவும் இறுக்கங்களைத் தளர்த்தி முகத்தை சூப்பர் கூலாக வைத்திருக்கவும் பேசியல் செய்து கொள்ளலாம். 

குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்கள் கொலோஜின் பேசியல் செய்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.கருவளையங்களை விரட்டிவிடுங்கள்.திருமணத்தன்று உங்களை எடுப்பான தோற்றத்துடன் காட்டுவதில் உங்கள் கண்கள் முக்கிய பங்கு வகிகக்கப் போகின்றது. அதனால் கண்களின் கீழ் கருவளையம் இருந்தால் அதை படிப்படியாக விரட்டியடித்துவிடுங்கள். 

வெள்ளரிக்காய் ஜெல் அல்லது கற்ற்ாழை ஜெல்லை கண்களுக்கு கீழே தடவி வந்தால் கருவளையங்கள் மறைந்து விடும்.என்ன சகோதரிகளே உங்கள் திருமணத்தன்று உங்கள் அழகை இன்னும் மெருகூட்டத் தயாரா? வாழ்த்துக்கள் . உங்கள் அகத்தின் அழகு முகத்திலும் ஜொலிக்கட்டும்.