" "" "

மாமியாரின் செயலால் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்..! தவிக்கும் 2 வயது குழந்தை..!!

இந்தியாவை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் கொடூரமாக கொல்லப் பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர் மர்வின் Joy. இவர் பிலிப் என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில் 2016ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் அமெரிக்காவில் குடியேறிய நிலையில் அங்கு தெற்கு ப்ளோரிடா “Broward Health Coral Springs” வைத்தியசாலையில் தாதியாக பணியாற்றி வருகிறார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இவர்களுக்கு திருமண வாழ்க்கை வெறும் 2 வருடங்கள் மட்டுமே மகிழ்ச்சியாக சென்ற நிலையில் 2018ம் ஆண்டில் இருந்து இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளது. இதனால் இருவரும் 2019ம் ஆண்டு பிரிந்த இருவரும் பிரிந்ததுடன் தனது குழந்தையுடன் மார்வின் தாயுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வழமை போல் பணிக்கு சென்று திரும்பிய மார்வின் மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

வைத்திய சாலையில் வாயிலில் வைத்தே கூர்மையான கத்தியால் மார்வின் குத்தப்பட்டார். சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் மார்வினை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். சம்பவம் தொடர்பாக மர்ம நபரை கைது செய்த பொலீஸார் அதிர்ந்துள்ள நிலையில் மார்வினை கொலை செய்தது அவரது கணவர் பிலிப் என்பது தெரியவந்தது.

கைது செய்யப் பட்ட பிலிப்பிடம் நடந்த விசாரணையில் மகள் மனைவி மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த நிலையில் மாமியார் தங்களை பிரித்ததாகவும் தாயுடன் சேர்ந்துகொண்ட மனைவி குழந்தையை காட்ட மறுத்ததாகவும் தெரிவித்ததுடன், இதன் காரணமாக கட்டுப் படுத்த முடியாத அளவு கோபம் வந்ததால் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்..!!