google-site-verification=j5PI3Jm-qMqh6IzIUwPVT9hIe8NRcEKqDp_izYflJp4 " " " "

20 வயது இளம் பெண் மர்ம மரணம்..! ஊட்டி பொலீஸில் பரபரப்பு புகார்..!!

ஆரோக்கியமாக இருந்த 20 வயது மனைவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி ஊட்டி நகர மத்திய பொலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் கந்தல் பகுதியை சேர்ந்த மோகன் ராஜ் என்கிற 24 வயது இளைஞன் மற்றும் அவரது குடும்பத்தினரே இவ்வாறு புகார் கொடுத்துள்ளனர்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

குறித்த பகுதியை சேர்ந்த மோகன் ராஜ் இவர் 20 வயதான மாயா என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்த நிலையில் மாயா கர்ப்பமானார். நேற்றைய தினம் பிரசவ வலி ஏற்பட வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட நிலையில் பெண் குழந்தை பிறந்ததாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

குடும்பத்தினர் மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கு முன் மாயா இறந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்ததை தொடர்ந்து உறவினர்கள் அதிர்ந்துள்ளனர். கர்ப்பமானதில் இருந்து மாயா உடல் ஆரோக்கியத்துடன் இருந்துள்ளார். முறையாக மருத்துவ சிகிச்சை அனைத்தையும் மாயா பெற்றுக் கொண்டதுடன் குழந்தையும் தாயும் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் பிரசவத்திற்காக வைத்திய சாலையில் அனுமதித்து குழந்தை பிறந்த பின் மாயாவின் மரணம் வைத்தியர்களால் நிகழ்ந்திருக்கும் என சந்தேகம் தெரிவித்து அவரது கணவர் மோகன் ராஜ் குறித்த புகாரை அளித்துள்ளார். பொலீஸார் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்..!!