" "" "

மார்டன் உடையில் அசத்தும் குடும்ப குத்து விளக்காக இருந்த நடிகை சீதா..! இந்த வயதில் இது தேவையா என திட்டி தீர்க்கும் ரசிகர்கள் .! வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!!

ஆண் பாவம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சீதா. முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து ஆயிரம் பூக்கள் மலரட்டும், இவள் ஒரு பெளர்ணமி, நிலவை கையில பிடிச்சேன், ஒரே ரதம், சங்கர் குரு என தொடர்ந்து நடித்தார், 1988ம் ஆண்டு நடிகர் பார்த்தீபனுடன் இணைந்து புதிய பாதை திரைப்படத்தில் நடித்தார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

புதிய பாதை திரைப்படம் இருவரின் வாழ்வில் காதல் பாதையை திறந்து விட்டதினால் இருவரும் 1990ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ள நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர்.

பின் 2010 ம் ஆண்டு சதீஸ் என்பவரை காதலித்து சீதா திருமணம் செய்துகொண்டார். சீதாவின் பணத்தை சதீஸ் வீணாக்கியதால் இருவருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு சதீஸை 2016ம் ஆண்டு சீதா விவாகரத்து செய்தார். அதன் பின் தனிமையில் தன் தாயுடன் வாழ்ந்து வரும் சீதா வீட்டு தோட்டம் செய்வதுடன் பெண்களுக்கு சுய தொழில் சம்மந்தமாக அறிவுரைகள் வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் இது வரை குடும்ப குத்துவிளக்காக ஆடை அணிந்து வந்த சீதா தற்போது மாடர்ன் பெண்ணாக மாறியுள்ளார். மாடர்ன் ஆடைகளில் சீதாவின் புகைப்படங்கள் வைரலாகி வர அட சீதாவா இது என ரசிகர்கள் வியந்து வருகின்றனர்..!!