கொசுத் தொல்லையால் அவஸ்த்தை படுகின்றீர்களா..!? நோய்களை பரப்பும் கொசுக்கள் நொடியில் மரணித்து விடும், இதை செய்யுங்கள்…!!

எல்லோர் வீட்டிலும் இருக்கும் மிகப் பெரிய தொல்லை இந்த கொசு எனும் நுளம்பு தான். தற்போதைய மழை வெள்ளம் போன்றவற்றால் இன்னும் அதிகரித்து விட்டது. கொசுக்களை தொல்லை என்று சொல்வதை விட ஆபத்து என்று தான் சொல்ல வேண்டும். அத்தனை உயிர்களையும் கொன்று புதைக்க இந்த சின்ன நுளம்பால் முடிகிறது எனில் அதன் பலத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

தற்போது சந்தையில் வித விதமான கொசுவர்த்திகள், மின்சார கொசு விரட்டிகள் என இருந்தாலும் எதற்கும் கொசுக்கள் கட்டுப் படுவது இல்லை, மாறாக கொசுவர்த்திகளும் கொசுக்களுடன் சேர்ந்து தீராத நோய்களையே எமக்கு கொடுக்கின்றது.அதாவது ஒரு கொசுவர்த்தியின் புகை 100 சிகரட்டின் புகையுடன் ஒத்தது எனில் சுவசிக்கும் எமக்கு புற்று நோய் இலகுவில் வந்துவிடுவதோடு, நுரையீரல் சம்மந்தப் பட்ட பல நோய்களும் தொற்றிக் கொள்கிறது

“கம்பு கொடுத்து அடிவாங்கி கதையாக மாறிவிடுகின்றது. சரி இந்த கொசுகளுக்கு என்ன தான் தீர்வு என நீங்கள் யோசிக்கலாம் பல இயற்கை தீர்வு இருக்கிறதே. அதில் மிகவும் முக்கியமான மருத்துவ முறை இது தேவையான பொருட்கள் வேப்பெண்ணை, கற்பூரம், பிரிஞ்சி இலை இவ்வளவு தான். செய்முறை: மூன்று மேசைக்கரண்டி வேப்பெண்ணை, கற்பூரம் ஒரு தேக்கரண்டி இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இதில் பிரிஞ்சி இலையை நனைத்து பற்ற வைய்யுங்கள், அவ்வளவு தான் வேப்பெண்ணை கற்பூரம் இவை இரண்டுமே உடலுக்கு நன்மை தரக்கூடியவை அதனால் எந்த தீங்கும் நமக்கு கிடையாது. ஆனால் நுளம்புகளுக்கு இவை இரண்டையும் கண்டாலே தெறித்து ஓடும். அத்துடன் பிரிஞ்சி இலையில் இருந்து வரும் புகையினால் கொசுக்கள் செத்து மடிவதை நீங்களே பார்க்கலாம்.