" "" "

“முள்ளிவாய்க்கால் நினைவு தூபி” யை அகற்றியது இவர் தான், நாங்கள் அல்ல” இராணுவ தளபதி உட்பட அரசும் தெரிவிப்பு.!! இவர் எல்லாம் தமிழரா குவியும் கண்டனங்கள்.!!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அகற்ற முடிவெடுத்தது அரசோ, இராணுவத்தினரோ அல்ல யாழ் பல்கலைக்கழக பல்கலைக்கழக உபவேந்தர் தான் என
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரசிங்க அவர்கள் இன்று கொழும்பில் ஊடங்களை சந்தித்த போது தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு இலங்கை படையினரால் படுகொலை செய்யப் பட்ட தமிழ் மக்களுக்காக பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப் பட்ட “முள்ளிவாய்க்கால் நினைவு தூபி”யை நேற்று இரவு மின் விளக்குகளை அனைத்து விட்டு JCB இயத்திரத்தின் உதவியுடன் அகற்றினார்கள். பல்கலைக்கழக வாயில் மூடப் பட்டதுடன் முப்படையினரும் பல்கலைக்கழகத்தை சூழ்ந்திருந்தனர்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

நினைவு தூபியை அகற்றுவது அறிந்து உடனடியாக மாணவர்கள் பல்கலைக்கழகம் முன்பு போராட்டம் நடத்திய நிலையில் இரண்டு மாணவர்களை பொலீஸார் கைது செய்தனர். இன்று வரை தொடரந்த குறித்த போராட்டத்தை கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தினார்கள். ஆனாலும் சில மாணவர்கள் தற்போது வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் இராணுவ தளபதி சர்வேந்திர் சில்வா அவர்கள் இந்த நினைவு தூபி அகற்றுவதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என் கூறியிருந்த நிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரசிங்க அவர்களும் இதற்கும் எமக்கும் சம்மந்தம் இல்லை இந்த நினைவு தூபியை அகற்றும் முடிவை எடுத்தது பல்கலைக்கழக உபவேந்தர் தான் என் தெரிவித்துள்ளார். தமிழனே தமிழனை அழிக்கும் கொடூரம் இங்கு தான் என் மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். !!