" "" "

இலங்கை வரலாற்றில் முதல் முதல் கை கோர்த்த தமிழ் முஸ்லீம் மக்கள். முற்றாக முடங்கியது வடக்கு கிழக்கு.!! இதுவே சிறு பான்மையினரின் முதல் வெற்றி.!!!

யாழ்/ பல்கலைக்கழகத்தில் அமைக்கப் பட்டிருந்த “முள்ளிவாய்க்கால் நினைவு தூபி” இரவோடு இரவாக அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் கொரோனா வைரஸை காரணம் காட்டி கூட்டம் கூடக் கூடாது என்றும், அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவீர்கள், என்றும் பொலீஸாரால் எச்சரிக்கை விடுக்கப் பட்டதை தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் மட்டும் நின்று கொண்டு மற்றவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் இதற்கு தீர்வு வேண்டும் என்று கூறி உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தனர். உண்ணாவிரத போராட்டம் 3 நாட்களாக தொடர்ந்ததால் மாணவர்களின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுக்க தொடங்கினார்கள். இதனை தொடர்ந்து இன்று அதிகாலை மாணவர்கள் உண்ணாவிரயம் மேற்கொண்ட இடத்திற்கு வந்த துணைவேந்தர் மீண்டும் நினைவு தூபியை கட்டித் தருவதாக கூறியதுடன் அடிக்கல் நாட்டினார் இதனால் மாணவர்களின் உண்ணா விரத போராட்டம் கைவிடப் பட்டது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இருப்பினும் துணைவேந்தர் நினைவிதூபியை அகற்றியது தமிழர் வாழ்வில் மாறாத வடு, மற்றும் என்றும் நீக்க முடியாத கறை இதனை என்றுமே சரி செய்ய முடியாது என மாணவர்கள் கூறியுள்ளனர். அத்துடன் ஏற்கனவே திட்டமிட்டபடி வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் “நினைவு தூபி” உடைப்பிற்கு எதிராக இன்று பூரண ஹர்தாலை ஏற்பாடு செய்தனர். தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு முதல் முறை முஸ்லீம் மக்கள் மதிப்பளித்துள்ளதுடன் மட்டக்களப்பு, மன்னார் போன்ற இடங்களில் வாழும் அனைத்து முஸ்லீகளும் வர்த்தக நிலையங்களை மூடி ஹர்த்தலுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, யாழ்ப்பாணத்தில் சில இடங்கள் என முற்றாக முடங்கி உள்ளது. சிறுபான்மை இரு இனங்கள் ஒன்று படும் போது எத்தனை விடயங்களை சாதிக்க முடியும் என பெரும்பான்மை இனத்திற்கு இது மிகப் பெரிய எடுத்துக் காட்டு. வட கிழக்கில் அரச பேரூந்துகள் தவிர்த்து வேறு எந்த பேரூந்தும் இயங்கவில்லை, அரச பாடசாலைகளுக்கு கூட இன்று மாணவர்கள் செல்லவில்லை என்பது குறிப்பிட தங்கது.!!