திருமணமாகி சில நாட்களில் மனைவியை ஏமாற்றி துடிக்க துடிக்க கொலை செய்த கணவன்.! இந்தியாவில் தொடரும் கொடூரங்கள்..!!
காதலனின் மனைவியை கொலை செய்ய உதவிய கள்ளக் காதலியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இந்தியாவின் தெலுங்கான மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. நாகேஷ்வரரெட்டி என்பவருக்கு நாவ்யா என்ற பெண்ணை பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தின் போது நாவ்யா ,B.Tech படித்துக் கொண்டிருந்ததால் படிப்பை தொடர நாகேஷு ரெட்டியின் குடும்பத்தினர் அனுமதித்திருந்தனர்.
இந்த நிலையில் திடீரென சில நாட்களுக்கு முன்பு கல்லூரி சென்ற தனது மனைவியை காணவில்லை என நாகேஷ் பொலீஸில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பொலீஸார் தேடிய போது கொட்டாலங்கா என்ற கிராமத்தில் நாய்கள் பண்ணை ஒன்றில் நாவ்யா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப் பட்டார்.
திருமணமாகி சில நாட்களில் நாவ்யா மரணமடைந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியதால் பொலீஸார் நாகேஷின் நடவடிக்கையை கவனித்துள்ளனர். அதன் போது நாவ்யாவை நாகேஷ் கொட்டலங்கா பகுதிக்கு அழைத்து சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை செய்த போது கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
திருமணத்திற்கு முன்பு 20 வயது பெண்ணுடன் காதலில் இருந்ததாகவும் பெற்றோர் கட்டாயபடுத்தி நாவ்யாவை திருமணம் செய்து வைத்ததாகவும் தெரிவித்த நாகேஷ் இந்த காதல் நாவ்யாவிற்கு தெரிய வந்ததாவும் தெரிவித்தார். அத்துடன் காதலை விட்டுவிட கூறியதால் தான் கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.
கல்லூரியில் இருந்து குறித்த பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு காத்திருந்த காதலியின் உதவியுடன் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுவிட்டு வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பொலீஸார் நாகேஷின் காதலியை விசாரணைக்கு அழைத்த நிலையில் பயத்தில் ரயில் முன் குதித்து அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.