" "" "

வாட்ஸ் ஆப் முகநூலுக்கு குட் பை சொன்னதால் கிடைத்த பலன்

ராஜஸ்தான் மாநிலம் சிகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் நலின் கந்தேல்வால், இவர் தான் 2019ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்தவர். 720 மதிப்பெண்களுக்கு 701 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இவரைத் தவிர இதே மாநிலத்தைச் சேர்ந்த மேலும் 3 மாணவர்கள் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அந்த மாணவன் கூறுகையில் கடந்த 2 ஆண்டுகளாக நான் என் முழு கவனத்தையும் எனது படிப்பில் செலுத்தினேன். எனது பெற்றோர்கள் மருத்துவர்கள். அது மட்டும் இல்லாமல் எனது சகோதரரும் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். அவர்களின் முழு ஒத்துழைப்புடன், ஆசிரியர்களின் உதவியோடு நான் இந்த சாதனையை செய்து முடித்தேன் என கூறினார். மேலும் தினமும் 7 முதல் 8 மணி நேரம் படிப்பேன்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

வாட்ஸ்-அப், பேஸ்புக் எல்லாவற்றையும் நான் 2 ஆண்டுகளாக ஒதுக்கி விட்டேன் என கூறினார். இதுதான் என் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்றார்.நலின் கூறுவது சரி, ஒரே மாநிலத்தை சேர்ந்த 4பேர் வெற்றிப்பெற்ற இந்த இந்தியாவில் தான் எமது மாணவிகள் 3பேர் இறந்து போயுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமச்சீர் என்ற பெயரில் மிக எளிமையான பாடத்திட்டம் கொண்டு வந்ததால் தான் திடிரென கடினமான பாடத்திட்டத்தை மக்களால் உள்வாங்க முடியவில்லை என்பதும் ஒரு காரணம்.