" "" "

பெளத்த துறவிகளிடம் பறிப்போகப் போகிறதா ஹிந்துக்களின் வரலாற்று சிறப்பு மிக்க கோணேஸ்வரம் மற்றும் நல்லூர் கந்தசுவாமி கோயில்கள்..!

இலங்கையில் அண்மை காலமாக தமிழர்களின் பாரம்பரியங்கள் சிங்கள பெளதர்களால் அழிக்கப் பட்டு வருகிறது. திருகோணமலை கிண்ணியா நல்லத்தண்ணி கிணற்றில் ஆரம்பித்து இன்று நல்லூர் கந்தன் ஆலயம் வரை உரிமை கொண்டாட ஆரம்பித்துள்ளனர். ஆரம்பத்தில் யாழ் மற்றும் வன்னி பகுதியில் காணிகளை இலங்கை இராணுவத்தினர்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அபகரித்து வந்தனர், அதன் பின் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் கிண்ணியாவை ஆக்கிரமித்தனர் , தற்போது இலங்கை தேரர் ஒருவர் உலக பிரசித்திபெற்ற கோயிலான கோணேஸ்வரம் கோயில் பெளத்தர்களின் விகாரை என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பெளத்தர்களுக்கு சொந்தமான விகாரையின் மேல் கோணேஸ்வரம் அமைந்துள்ளது என மோகானந்த தேரர் குறிப்பிட்டுள்ளார். மேலும் புகழ்பெற்ற ஹிந்துக்களின் கோயிலான நல்லூர் கந்தசுவாமி ஆலயமும் பெளதர்களுக்கு சொந்தமானது என தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தற்போது மக்கள் மத்தியில் வேகமாக பரவி வரும் நிலையில் இதற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. இந்த விடயத்தை இப்போதே தீர்க்காவிட்டால் இவை பெளதர்களின் கைக்கு சென்று விடும் என்பதால் சம்மந்தப் பட்டவர்கள் தலையிட்டு இந்த பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என தெரிவித்துள்ளனர்..!!

நல்லூரும் நமதே.
இன்றய பத்திரிகை செய்திகளை பார்வையிட லிங்கை அழுத்தவும்.👇