“நமீதா கூப்பிட்டால் போவார்கள்” நடிகை நமீதாவை கிண்டல் செய்த எஸ்.வி சேகர்.! எங்க கூப்பிட்டால் என கலாய்க்கும் நெட்டிஷன்கள்.!!
காமெடி நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி. சேகர் நடிகை நமீதாவை கிண்டல் செய்த விடயம் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் எஸ். வி சேகர். மேடை நாடகங்களில் அசத்திய இவர் சினிமாவிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நிரந்தர இடம்பிடித்திருந்தார்.
சினிமா வாய்ப்பு குறைந்த போது அரசியலை தேர்வு செய்த எஸ்.வி. சேகர் முழு நேர அரசியல் வாதியாக இருக்கின்றார். முன்னணி கட்சியின் பேச்சாளரான எஸ்.வி சேகர் அண்மையில் நடந்த பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளவில்லை, அவருக்கு பதில் நமீதா கலந்துகொண்டிருந்தார்,
இது பற்றி எஸ்.வி சேகரிடம் கேட்ட போது இருவரும் ஒரே கட்சி தான் யார் பேசினால் என்ன? என்னை கூப்பிடவில்லை நான் போகவில்லை, அத்துடன் நமீதா கூப்பிட்டால் போவார்கள் என்பதால் நமீதாவை அழைத்திருக்கலாம் என கிண்டலாக கூறிவிட்டு , இதை தவறாக போட்டு விடாதீர்கள் கூட்டத்திற்கு நமீதா வர சொன்னால் கூட்டம் அதிகரிக்கும் என்று நமீதாவை பேச வைத்திருக்கலாம் என கூறியுள்ளார். இதற்கு இன்னும் நமீதா ரியாக்ட் செய்யவில்லை பார்க்கலாம் என்னாகும் என்று.!