விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப் பட்ட இளம் பெண்..! காரணம் இது தானாம்..! வைரலாகும் புகைப்படங்கள்…!!

இளம் பெண் ஒருவருக்கு மெல்போர்ன் விமான நிலையத்தில் வைத்து விமானத்தில் ஏற அனுமதி மறுத்த விடயம் தொடர்பாக செய்திகள் வைரலாகி வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் மல்யுத்த வீராங்கனையும் தற்போது உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளருமான Natalie Eva Marie என்பவருக்கே விமானத்தில் ஏற தடை விதிக்கப் பட்டுள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இது குறித்து Natalie தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில் இறுக்கமான ஆடை அணிந்துள்ளதால் என்னை விமானத்தில் ஏற அனுமதிக்க மறுத்தனர். என் கணவரும் உடலோடு ஒட்டிய ஆடையை அணிந்திருந்தார் அவருக்கு விமானத்தில் ஏற அனுமதித்தனர். நான் அணிந்து இருந்தது உடற்பயிற்சி ஆடை. இதில் என்ன தவறு என்பது எனக்கு புரியவில்லை.

பல பெண்கள் உள்ளாடை தெரியும் போன்ற கட்டையான ஆடையும் அதே விமானத்தில் ஏறினார்கள். அதனை கண்டுகொள்ளவில்லை, இவர்கள் ஆண் பெண் என்ற ரீதியில் நடத்துகிறார்கள். அனைவரையும் சமமாக பார்ப்பதே சிறந்த ஒன்றாகும் என தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்:

பயணிகளின் ஆடை விடயத்தில் அதிகம் கவனம் கொள்ளும், இதன் அடிப்படையில் நீச்சல் உடை, உடற்பயிற்சி உடை, அசுத்தமான உடை, கிழிந்த மோசமான ஆடையில் உள்ளவர்களுக்கு அனுமதி மறுக்கப் படும் வாய்ப்புகள் உள்ளது. இதுவே Natalie க்கும் நடந்துள்ளது. என தெரிவித்துள்ளனர்..!