ஆஸியில் தீயைப் பற்ற வைக்கும் பறவைகள்!

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ நாளாந்தம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இதனால் உலகமே துயரத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், காட்டுத் தீ பரவுவது குறித்து அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அவுஸ்திரேலிய சுதேச பறவைகள் சிலவே காட்டுத்தீயை பரப்பி வருகின்றன என்ற தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள அதேவேளை, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இப்பறவைகள் கழுகு இனத்தை சேர்ந்தவை எனவும், இவை தீயை பற்ற வைத்து கொள்ளியை கால்களால் பற்றியபடி காவிச் சென்று, தூரமாகத் தென்படும் புல்வெளிகளில் போட்டு, அவற்றை பற்றச் செய்துவிடுகின்றன.

இவை இதைச் செய்வதற்கான காரணம், குறித்த புல்வெளிகளில் ஒளிந்திருக்கும் எலி போன்ற சிறு பிராணிகளை உணவாக்குதற்கே என விஞ்ஞானிகள் ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளனர்.