" "" "

ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முயன்ற விஜய் தொலைக்காட்சி பிரபலம்.! கல்யாணத்தை தடுத்து நிறுத்தி கைது செய்த பொலீஸார்.!!

கலக்கப் போவது யாரு சீசன் 5ல் கலந்துகொண்டு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றவர் நவீன். பல பிரபலங்களின் குரல்களை இலகுவாக பேசி மிமிக்ரி செய்த நவீனுக்கு திரைப்பட வாய்ப்புகளும் வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் மலேசியா சென்ற நவீன் அங்கு தங்கி இருந்து கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணுடன் மிக நெருக்கமாக டிக்டாக் செய்து வீடியோக்கள் வெளியிட்டார்.

ஆரம்பத்தில் டிக் டாக் தானே என நினைத்த போதும் பின்பு தான் கிருஷ்ணகுமாரிக்கும் நவீனுக்கும் காதல் என்ற விடயம் தெரிய வந்தது. அது மட்டும் இன்றி கிருஷ்ணகுமாரியை தமிழ்நாடு அழைத்து வந்த நவீன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளார். இந்த விடயம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து நவீனின் மனைவி காவல்துறையில் பரபரப்பு புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் கணவர் நவீன் முதல் மனைவி இருக்கும் போதே இன்னொரு பெண்ணுடன் திருமணம் செய்யப் போவதாகவும் நடவடிக்கை எடுக்கும் படியும் தெரிவித்திருந்தார். திவ்யாவின் புகாரின் அடிப்படையில் திருமணம் நடக்க இருந்த இடத்திற்கு சென்ற பொலீஸார் நவீனை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பேசிய திவ்யா எனக்கும் நவீனுக்கும் எந்த சண்டையும் இருக்கவில்லை. ஒற்றுமையாகவே இருந்தோம், ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பது எனக்கு தெரியவில்லை. அவர் மிகவும் அன்பானவர் என தெரிவித்துள்ளார்.!