சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் எஸ் .கே.13
நகைச்சுவையில் அசத்தும் சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் படத்தினை இயக்கப்போவது எம்.ராஜேஷ். சிவா மனசில சக்தி, பாஸ் (எ) பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என நகைச்சுவையில் கலக்கும் இயக்குனர் ராஜேஷும் சிவாவும் இணைவதால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என நம்பலாம்.
இன்னமும் பெயரிடப்படாததால் எஸ்.கே.13 என பெயரிட்டு படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிவாவின் ஜோடியாக நயந்தாரா நடிக்கிறார். மற்றைய நடிகர் நடிகைகள் விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்கின்றது தயாரிப்பு தரப்பு.
புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்