" "" "

வவுனியா நெடுங்கேணி மகாவித்தியால ஆசிரியரின் கவனக் குறைவால் 3ம் வகுப்பு மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்..! தந்தை வெளியிட்டுள்ள வீடியோ..தயவு செய்து பகிருங்கள்…!!

வவுனியா மாவட்டம் நெடுங்கேணி மகாவித்தியாலய ஆசியர்களின் கவனக் குறைவால் தனது மகளுக்கு நடக்க இருந்த ஆபத்து பற்றி தந்தை ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். குறித்த பாடசாலையில் 3ம் வகுப்பில் கல்வி கற்று வரும் சிறுமிக்கு இன்று விசேட வகுப்பு இருப்பதாக பள்ளி ஆசிரியர் தந்தைக்கு அறிவித்ததை தொடர்ந்து காலையில் மகளை பாடசாலை அழைத்து வந்த தந்தை ஆசியரிடம் வகுப்பு முடியும் நேரம் பற்றி கேட்டுள்ளார்.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

Pm 12.00 க்கு வகுப்பு முடியும் என ஆசிரியர் கூறியதை தொடர்ந்து முடிந்ததும் தனக்கு மிஸ் கால் கொடுக்கும் படியும் தான் வந்து சிறுமியை அழைத்துச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் குறித்த ஆசிரியரோ 11.30 மணிக்கு முன்பாக வகுப்பை முடித்துவிட்டு தந்தைக்கு அறிவிக்காமல் சென்றுள்ளார்.

அனைவரும் சென்ற பின் மாணவி தனித்து நின்ற போது பாடசாலையில் கட்டட வேலை செய்யும் இளைஞர்கள் சிறுமிக்கு பாலியல் சீண்டல் செய்யுதுள்ளனர். ஏற்கனவே good & bad டச் பற்றி பெற்றோர் கூறி இருந்ததால் தனக்கு என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொண்ட சிறுமி இளைஞனின் கையை கடித்துவிட்டு தந்தையை தேடி 1 கிலோ மீட்டர் தூரம் ஓடியுள்ளார்..இது தொடர்பாக சிறுமியின் தந்தை பதிவிட்ட வீடியோ இதோ..