பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு அடித்த மிகப் பெரிய அதிர்ஷ்டம்.! வாழ்த்தும் ரசிகர்கள்.. என்ன தெரியுமா? இத பாருங்கள்.!!
நெடுஞ்சாலை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஆரி. ஆனால் அதன் பின் அவர் நடித்த திரைப்படங்கள் பெரிதாக ஓடவில்லை. இதனால் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி இரண்டு மூன்று நாயகர்கள் நடிக்கும் திரைப்படங்களில் ஒருவராக நடித்து வந்தார் ஆரி.
விவசாயம் மற்றும் சமூக சேவைகளிலும் ஆரி ஈடு பட்டு வந்த நிலையில் பிக் பாஸ் வந்தார். சீசன் 4ல் ரசிகர்கள் மனம் கவர்ந்த இவர் பைனல் வரை வந்து டைட்டில் வெற்றி பெற்றார். இதன் பின் பேசிய ஆரி இந்த வெற்றி எனதல்ல, என் ரசிகர்களின் வெற்றி என கூறினார்.
இந்த நிலையில் ஆரிக்கு வெற்றிக்கு மேல் வெற்றி குவிந்து வருகிறது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதுமே இயக்குனர் அபினின் இயக்கத்தில் வித்யா பிரதீப் ஜோடியாக திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
இன்றைய தினம் இந்த திரைப்படத்திற்கான பூஜை போடப் பட்ட நிலையில் இயக்குனர் முருகதாஸும் திரைப்பட பூஜையில் கலந்துகொண்டுள்ளார். இந்த வருடம் ஆதியின் அலேகா மற்றும் பகவான் ஆகிய திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகின்றது.!!
With All your Blessings My Next Film Pooja Done Today With Director Abin 😊Thankyou @ARMurugadoss sir #Aari #AariArjunan pic.twitter.com/LwSsaACPIT
— Aari Arujunan (@Aari_Official) January 19, 2021