" "" "

17 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்து பாலத்தில் தொங்கவிட்ட குடும்பத்துனர்.! வெளியான காரணம்.!!

நாள் முழுவதும் விரதம் இருந்துவிட்டு மாலை ஜீன்ஸ் டாப் அணிந்து பூஜை செய்த 17 வயதான சிறுமியை அடித்து கொலை செய்து பாலத்தில் தொங்கவிடப் பட்ட சம்பவம் ஒன்று உத்திர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. Deoria மாவட்டத்தில் உள்ள Suvreji Kharf பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா, இவரது மகள் நேஹா பாஸ்வான், இவர்கள் தந்தை வழி பாட்டி தாத்தா மற்றும் அத்தை மாமாக்களுடன் இருந்து வந்துள்ளனர். சம்பவ தினத்தன்று குடும்பத்தினர் அனைவரும் விரதம் இருந்துள்ளனர்.

நேஹாவும் அதிகாலையில் இருந்து மாலை வரை குடும்பத்தினருடன் விரதம் இருந்துள்ளார்.பின்னர் மாலையில் பூஜை ஏற்பாடு செய்யப் பட்டு பூஜை நடந்த போது ஜீன்ஸ் மற்றும் முழுநீள டாப் அணிந்து பூஜையில் அமர்ந்துள்ளார். இதனை தாத்தா பாட்டி மற்றும் அத்தைகள் கண்டித்ததுடன் உடனடியாக ஆடையை மாற்றும் படி கூற ஜீன்ஸ் மரியாதையான ஆடை தான், நான் பூஜைக்கு பங்கம் ஏற்படாமல் நீண்ட டாப் அணிந்துள்ளேன் அதனால் மாற்ற மாட்டேன் என நேஹா கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த பாட்டி அருகில் இருந்த கட்டையை எடுத்து நேஹாவை தாக்கியுள்ளார். அத்துடன் அத்தைகளும் தாக்கியதால் இரத்தம் கொட்ட கொட்ட நேஹ மயங்கி உள்ளார். சம்பவம் குறித்து தாய் சகுந்தலா கூறுகையில் அடிக்க வேண்டாம் என கதறினேன், யாரும் கேட்கவில்லை, இரத்தம் கொட்ட ஆரம்பித்ததும் துடித்துப் போனேன் வைத்தியசாலை அழைத்துச் செல்ல தயாரான போது என்னை வீட்டில் விட்டுவிட்டு நேஹாவை அழைத்துக் கொண்டு குடும்பத்தினர் சென்றுவிட்டனர். பயதில் என் உறவினர்களுக்கு அழைப்பை ஏற்படுத்து வைத்தியசாலை செல்லச் சொன்னேன்.

வைத்தியசாலையில் நேஹா இல்லை, பொலீஸில் என் குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். விடிய விடிய நேஹாவை தேடியதில் பாலத்தில் தொங்கியபடி சடலமாக மீட்கப் பட்டார். என் கணவரின் குடும்பத்தினர் நேஹாவை கொலை செய்து பாலத்தில் தொங்க விட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பொலீஸார் தெரிவிக்கையில் நேஹாவின் தாத்தா பாட்டி மற்றும் ஆட்டோ ட்ரைவரை கைது செய்துவிட்டோம், அவரது அத்தைகள் மற்றும் மாமாக்கள் தலைமறைவாகி விட்டார்கள், அவர்களை தேடி வருகின்றோம் என தெரிவித்துள்ளனர்.!