" "" "

முதல் முதல் நித்தியானந்தாவின் “கைலாசா” நாட்டில் இருந்து சிஷ்யைகள் வெளியிட்ட வீடியோ .! இவ்வளவு அழகா கைலாசா வாய் பிளக்கும் பக்தர்கள். இதோ வீடியோ..!!

சர்ச்சை சாமியாரான நித்தியானந்தா பற்றி ஏராளமான செய்திகள் வெளியாகி வந்தாலும் அவரை இன்னும் கைது செய்ய முடியாத நிலையில் இந்திய காவல்துறை உள்ளது. சிறுவர் கடத்தல், சிறுவர் துஷ்பிரயோகம், தேசத் துரோகம், என ஏராளமான வழக்குகள் நித்தியானந்தா மீது உள்ள போதும் அவர் சுதந்திரமாகவே சுற்றித் திரிகிறார்.

இந்தியாவில் மட்டும் இன்றி உலகம் முழுவதிலும் பிரபலமான நித்தியானந்தா கடந்த வருடம் சொந்தமாக தீவு ஒன்றை வாங்கி அதற்கு “ஆதி கைலாசா”என்று பெயர் வைத்தார். இதற்கு பாஸ்போர்ட், தொடர்பாக அறிவித்திருந்ததுடன் விசா தொடர்பாகவும் விண்ணப்பிக்கலாம் என கூறியதுடன் ” கைலாசா” நாட்டிற்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் ஒன்றையும் ஆரம்பித்தார்.

இந்த நிலையில் கைலாஸா நாட்டிற்கான கரண்சி பற்றிய அறிவிப்பை கூடிய சீக்கிரம் வெளியிடப் போவதாக நித்தியானந்தா தெரிவித்தார், அத்துடன் இது தொடர்பான இன்னும் பல விடயங்களை இந்த விநாயகர் சதுர்த்திக்கு தெரிவிப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் நித்தியானந்தாவின் சிஷ்யைகள் முதல் முறை கைலாசாவில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் கிருஷ்ண ஜெயந்தியை அனைவரும் கொண்டாடிய நிலையில் கைலாசாவில் இருந்தும் நித்தியானந்தா சிஷ்யைகள் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடி உள்ளனர். இதனை வீடியோவாக பதிவு செய்து இணைய தளத்தில் பதிவிட்டுள்ளனர். முதல் முதல் “கைலாசா”வில் இருந்து வெளியான வீடியோ என்பதால் வைரலாகி வருகிறது..!!