மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயாவை கற்பழித்து கொலை செய்த மகனை மன்னிக்கும் படி .. கெஞ்சிய குற்றவாளியின் தாய்..!! நிர்பயாவின் பெற்றோர் கூறிய அதிரடி பதில்…!!

ஓடும் பஸ்ஸில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு கற்பழித்து கொலை செய்யப் பட்டார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப் பட்டனர். இதில் 16 வயது சிறுவன் இருந்ததால் சிறுவர் நன்னடத்தை சிறையில் 3 வருடங்கள் இருந்து விடுதலையானான். மிகுதி 5 பேரில் ஒருவன் சிறைச்சாலையில் தற்கொலை செய்துகொண்டான்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மிகுதி 4 பேருக்கான வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப் பட்டது. ஆனால் தண்டனை நிறைவேற்றப் படாமல் இருந்தது. இந்த நிலையில் நிர்பயாவின் பெற்றோர் தண்டனையை உடனடியாக நிறைவேற்ற கோரி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நேற்றைய தினம் நீதிமன்றம் வந்தது.. இதன் போது நீதிபதி குற்றவாளிகளுக்கான தண்டனையை ஜனவரி 22 ம் திகதி காலை 7 மணிக்கு நிறைவேற்றும் படி உத்தரவிட்டார். அதன்போது குற்றவாளியான முகேஷ்சிங் என்பவரின் தாயார் நிர்பயாவின் அம்மாவின் சாரியை பிடித்துக் கொண்டதுடன் என் மகனின் உயிரை காப்பாற்றுங்கள், உங்களிடம் உயிர் பிச்சை கேட்கிறேன் என அழுதுள்ளார்.

இதன் போது கண்ணீர் விட்டு அழுத நிர்பயாவின் தாய் உங்கள் மகனால் கெடுக்கப் பட்டது என் மகள். உங்கள் மகனை நான் மன்னித்தால் என் மகள் என்னை மன்னிக்க மாட்டாள்…இந்த நாளுக்காக தான் 7 வருடம் காத்திருந்தோம் என கூறிவிட்டு சென்றுள்ளார்…!!