பெண்களிடம் நிர்வாணப் படங்களைக் கேட்ட நித்தி; கிளம்பியது புதிய சர்ச்சை!

பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை வட்ஸ் அப்பில் தனக்கு அனுப்பும்படி நித்தியானந்தா, பெண்களை வற்புறுத்தினார் என பரபரப்புக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

தனது இரு மகள்களைக் கடத்தி வைத்திருக்கிறார் என தொழிலதிபர் ஜனார்த்தன சர்மா, நித்யானந்தா மீது அளித்த முறைப்பாடு மீதான விசாரணை நடைபெற்றது. இதன்போது, ஜனார்த்தனன் சர்மா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில்,

“நித்யானந்தா வட்ஸ் அப் குழு ஒன்றை நடத்தி வந்துள்ளார் எனவும், அதில் தனது இரு மகள்கள் உட்பட பன்னிருவர் இடம் பெற்றிருந்தனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை, இந்தக் குழுவில் உள்ளவர்களை தங்களது நிர்வாணப் புகைப்படங்களை அனுப்புமாறு நித்யானந்தா வற்புறுத்தினார்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நித்தியானந்தா மீது ஏற்கனவே பல்வேறு சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகள் எழுந்தள்ள நிலையில், புதிதாக இந்தக் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.