“என் உயிர் ஆபத்தில் உள்ளது காப்பாற்றுங்கள்” வீடியோ வெளியிட்ட நித்தியானந்தா சிஷ்யைகள்..!தடுமாறும் பொலீஸார்..!!

நித்தியானந்தா தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவரை தவிர வேறு யாராலும் முடியாது என்ற நிலையில் தற்போது வெளியாகி வரும் வீடியோக்கள் அதிர வைக்கிறது. நித்தியாவின் ஆசிரமத்தில் பணிபுரிந்த ஜனார்த்தன சர்மாவின் மகளான தத்துவப் பிரியானந்தா, மற்றும் நித்யநந்திதா ஆகியோரை நித்தியானந்தா பாலியன் கொடுமை செய்வதாகவும் தனது மகளை காப்பாற்றி தரும்படியும் ஜனார்த்தன சர்மா பொலீஸில் புகார் கொடுத்தார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

ஆனால் அவரது மகள்கள் இருவரும் எங்களுக்கு எந்த தொல்லையும் இல்லை, நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதன் பின் நித்தியானந்தா மீது ஏராளமான புகார்கள் குவிய தொடங்கியது, இதனால் நித்தியானந்தா தலைமறைவானார். வெளியூருக்கு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியது.

இந்த நிலையில் தத்துவப் பிரியானந்தா திடீரென வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் என்னை காப்பாற்றுங்கள், ஆசிரமத்தில் வாழ எனக்கு முடியவில்லை, இந்த வீடியோ வைரலாகும் போது நான் உயிருடன் இருப்பேனோ தெரியவில்லை, இது கொடுமையான நரகம் என அந்த வீடியோவில் இருந்தது.

இதனை தொடர்ந்து சர்மா மீண்டும் அகமதாபாத், விவேகானந்தா நகர் பொலீஸில் மகள்களை காப்பாற்றும் படி புகார் கொடுத்தார். இந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சர்மாவின் மகள்கள் வைரலாகும் வீடியோக்கள் 1 வருடத்திற்கு முன்பு எடுத்ததென்றும்.

அப்போது விளையாட்டு தனமாக செய்த வீடியோ என்றும் குறிப்பிட்டு வீடியோ வெளியிட்ட தத்துவ பிரிய தனியா சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டி தான் அந்த வீடியோ என்றும் தெரிவித்துள்ளார்…!!இதனை ஆய்வு செய்த நீதிமன்றம் வரும் 10ம் திகதிக்குள் நித்தியானந்தா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் படி பொலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளதுடன், வரும் 16ம் திகதிக்கு முதல் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் இந்திய தூதரகத்தில் ஆஜராக வேண்டுமென தெரிவித்துள்ளது..!!