" "" "

சுவாமி நித்தியானந்தாவின் கைலாசாவில் சிஷ்ஷைகளுடன் விளையாடும் குழந்தைகள்! யாருடைய குழந்தைகள் கேள்வி எழுப்பும் நெட்டிஷன்கள்!!

கைலாசாவில் குழந்தைகள் எங்கிருந்து வந்தது என்ற கேலி கிண்டல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்தியாவில் சாதாரண சாமியாராக தனது பயணத்தை ஆரம்பித்து தற்போது சாதனை சாமியாராக இருப்பவர் சுவாமி நித்தியானந்தா. குழந்தை கடத்தல், கொலை, கொள்ளை என பல வழக்குகளில் சிக்கிய போதும் சட்டத்திடம் சிக்காத சுவாமி நித்தியானந்தா தற்போது தலைமறைவாக வாழ்ந்து வருகின்றார்.

இந்தியாவை விட்டு வெளியேறியதாக கூறப்படும் இவர் தனி நாடு அமைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. குறித்த நாட்டிற்கு “கைலாசா” என பெயர் வைத்ததுடன் நாட்டுக்கான கரண்சி, பாஸ்போர்ட், விஷா. என அனைத்தையும் அறிமுகப் படுத்தினார்.

அதன் பின் இந்து நாடுகளுடன் மட்டும் வியாபார உறவு வைத்துக் கொள்வதாக கூறிய நிந்தியானந்தா, பொலீஸார் எவ்வளவு தேடியும் நித்தியானந்தாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நித்தியானந்த கைலாசாவில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இந்த புகைப்படங்களில் நித்தியானந்தாவின் சிஷ்ஷைகள் குழந்தைகளுடன் விளையாடுகின்றனர். இதனை பார்த்த பலரும் கைலாசாவிற்கு குழந்தைகள் வந்தது எப்படி? கைலாசாவில் இனபெருக்கம் ஆரம்பித்து விட்டதா என கிண்டல் செய்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் இதற்கான பதில் நித்தியானந்தா அவர்கள் கூறுவார்கள் என எதிர்பார்க்கப் படுகின்றது.!!