" "" "

படுக்கைக்கு அழைத்த டாக்டரால் பறிபோன அப்பாவி இளம் நர்ஸின் உயிர்.! இந்தியாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!!

இந்தியாவில் டாக்டர் ஒருவருடன் படுக்கையை பகிர வேண்டும் என தலைமை தாதிகள் மற்றும் டாக்டர் கட்டாயப் படுத்தியதால் நர்ஸ் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தை சேர்ந்தவர் மேகா ஆச்சார்யா. சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் கல்லூரியில் படித்த போதே இளைஞர் ஒருவரை காதலித்து பெற்றோரின் விருப்பத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

இவரது கணவருக்கு வேறு ஊரில் வேலை என்பதால் சொந்த ஊரிலேயே தங்கிய மேகா சூரத் பகுதியில் உள்ள சிவில் மருத்துவமனையில் நர்ஸாக பணி புரிந்துவந்தார். மேகா பணி புரிந்த வைத்தியசாலையின் தலைமை வைத்தியர் அவினாஷ் துபேடன், மேகாவை அடைய நினைத்துள்ளார். பல முறை அவினாஷ் மேகாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

ஆனால் அவினாஷின் ஆசைக்கு மேகா இணங்கவில்லை. இதனால் தலைமை தாதிகள் உட்பட டாக்டர் மிக மோசமாக மேகாவை நடத்தியுள்ளனர். குடும்ப கஷ்டம் காரணமாக அனைத்தையும் பொறுத்துக் கொண்டிருந்த மேகா இனியும் தன்னால் இந்த கொடுமைகளை தாங்க முடியாது எனவும் வைத்தியசாலையில் தனக்கு நடந்த கொடுமைகள் அனைத்தையும் எழுதிவைத்துவிட்டு துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பொலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் மேகா வைத்தியசாலையில் சக தாதியர்களால் துன்புறுத்தப் பட்ட விடயம் உறுதியாகியுள்ளது.!இதனை தொடர்ந்து க குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் பொலீஸார் ஈடுபட்டுள்ளனர்.!