இந்திய அணியின் தோல்வியும்..நியூஸிலாந்து அணியின் வெற்றியும்.. வாழ்த்துக்கள் நியூஸிலாந்து..!!

உலகக் கோப்பை கிரிக்கெட் செமி பைனலில் நேற்றைய தினம் இந்திய அணிக்கெதிராக நியூஸிலாந்து தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்து 50 ஓவர்களில் 8 விக்கட் இழந்து 239 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இது இந்திய அணிக்கு மாபெரும் ஓட்ட இலக்கல்ல அதனால் செமி பைனலில் இந்திய அணி வெற்றிபெற்று பைனல் செல்லும் என்று இந்திய கிரிக்கெட் விமர்சனங்கள் கூறிய நிலையில் ரசிகர்கள் நம்பினார்கள்.

நேற்றைய தினம் மழை காரணமாக போட்டி தடைப்பட இன்று இந்திய அணி துடுப்பெடுத்து ஆட ஆரம்பித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, பாண்டயா, தினேஷ் கார்த்திக் என அனைத்து முக்கிய விக்கட்டுகளை 100 ஓட்டங்களுக்குள் இந்தியா இழந்துவிட ஜடேஜா மற்றும் தோனி இருவரும் இந்தியா பைனல் செல்ல வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு கொடுத்தனர்.

மேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க!!

வெற்றியின் விளிம்பில் நிற்கும் தருணத்தில் ஜடேஜா ஆட்டமிழக்க அதனை தொடர்ந்து தோனியும் ஆட்டமிழந்தார். இதனையடுத்து 18 ஓட்டங்களால் இந்திய அணியை நியூஸிலாந்து அணி வென்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

இந்த தோல்வியானது இந்திய ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியாத தோல்வி தான். இருப்பினும் வெற்றி தோல்வி சகஜம் என்பதை மனதில் கொண்டு செயற்படுவோம். நியூஸிலாந்து அணியினருக்கு வாழ்த்துக்கள்..!!

You might also like
error: Alert: Content is protected !!