கோடிகளை அள்ளத் தயாராகுங்கள்; ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு அன்பளிப்புகளை அறிவித்தது உத்தர பிரதேசம்!

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளவில் நடைபெற்றுவருகிறது ஒலிம்பிக் போட்டிகள்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இது இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பானில் ஆரம்பிக்கவுள்ளது.

இதில், இந்தியாவின் உத்தரப் பிரதேசத்திலிருந்து பங்கேற்கும் வீர, வீராங்கனைகளுக்கு அம்மாநில அரசு பரிசுகளை அறிவித்து ஊக்கப்படுத்தியுள்ளது.

அதன்படி, ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வோருக்கு ஆறு கோடி ரூபாவும் வெள்ளி வெல்வோருக்கு நான்கு கோடி ரூபாவும் வெண்கலம் வெல்வோருக்கு இரண்டு கோடி ரூபாவும் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

அதேவேளை, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் தலா 10 இலட்சம் ரூபா ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்து வீரர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.