40 வயதில் இரண்டாவது திருமணம் முடித்து 41 வயதில் குழந்தை பெற்ற நடிகை ஊர்வசி..!

தமிழ் சினிமாவில் தனக்கான தனி இடத்தை பிடித்து வைத்திருந்தவர் நடிகை ஊர்வசி. அன்றைய முன்னணி நடிகர்களுடன் நடித்து முடித்துவிட்ட ஊர்வசி தற்போது முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடிப்பதுடன் சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது வாழ்க்கை குறித்து ஊர்வசி பேட்டி அளித்துள்ளார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

அதில் மூன்று சகோதரிகள் 2 சகோதர்கள் ஆரம்பத்தில் செல்லப் பிள்ளையாக இருந்த நான் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என உணர்ந்துகொண்டு நடிக்க ஆரம்பித்தேன். சினிமா எனக்கு பக்க பலமாக இருந்தது. ஆனால் எல்லோரையும் போல் நானும் வாழ்க்கையை வாழ ஆசைப்பட்டேன் அந்த வாழ்க்கை என் தலைவிதியை மாற்றிப் போட்டது.

2000ம் ஆண்டு நீண்ட நாட்களாக காதலித்த நடிகர் மனோஜை திருமணம் செய்தேன்.. அது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு அந்த திருமணம் என்னை குடிகாரியாக்கியது. வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கியது. அதில் இருந்து மீண்டு வர முயற்சித்தேன்,

அவமானங்கள் துரோகங்கள் என அனைத்தும் என்னை சூழ்ந்துகொண்டது. அதன் பின் விவாகரத்து பெற்று மீண்டு வர முடியாமல் தவித்த எனக்கு கைகொடுத்தவர் தான் என் நண்பர். பின் அவரே கணவனானார். தற்போது நான் வாழ்வது அவரால் தான்.

நான் இரண்டாவது திருமணம் செய்யும் போது என் வயது நாப்பது. 41 வயதில் குழந்தை பெற்றேன் இதன் போது ஏராளமான கேலி கிண்டல்கள் ஆரம்பத்தில் உடைந்து போனேன் பின் என் குழந்தைக்காக வாழ ஆரம்பித்தேன் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்..!