திடீரென ஏற்பட்ட நோயால் மேடையில் இருந்து இறங்கிய ஓவியா..!! கவலையில் ரசிகர்கள்…!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் முதல் ஆர்மி என்ற ஒன்று ஆரம்பிக்கப் பட்டது நடிகை ஓவியாவிற்கு தான். மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்த ஓவியா, தனது தாயாருக்கு ஏற்பட்ட கேன்சருக்கு மருத்துவம் செய்வதற்காக சிறிய கதாபாத்திரம் என்றாலும் என்ன மாதிரியான கேரக்டர் என்றாலும் நடித்தார்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

இருப்பினும் தாயை காப்பாற்ற முடியவில்லை. அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மற்றவர்களை விட ஓவியா உண்மையாக இருப்பதாக தோன்றியதால் ஓவியா ஆர்மி ஆரம்பிக்கப் பட்டது. ஆரவ்வுடனான காதலால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியா திரைப்படங்களில் பிஸியாக இருந்தார்.

இந்த நிலையில் நேற்றைக்கு முன் தினம் ஜீ தமிழ் சேனலில் விருது வழங்கும் நிகழ்வில் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். திடீரென மேடையில் இருந்து இருந்து சென்ற ஓவியா பின் மேடைக்கு வரவே இல்லை.

இந்த நிலையில் மேடையில் ஆட்டம் பாட்டம் என இருந்த ஓவியாவிற்கு திடீரென குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டதால் மேடையைவிட்டு இறங்கியதுடன் வைத்தி சிகிச்சை பெற்றுக் கொண்டதாகவும் வைத்தியர்கள் ஓய்வில் இருக்க கூறியதால் மீண்டும் மேடை ஏறவில்லை என்றும் தெரியவந்துள்ளது.!!