இரண்டு மகள்களையும் நிர்வாணமாக்கி கொலை செய்தது ஏன்.? பொலீஸாரை அதிர வைத்த தாய், தந்தை.!! கொடூர கொலைகளின் பின்னணி.!!
ஆடையில்லாமல் மகள்களை நிர்வாணமாக கொலை செய்தது ஏன் என பொலீஸ் விசாரணையில் பேராசிரியர் புருசோத்தம் நாயுடு கூறிய விடயங்களை பொலீஸாரை அதிர வைத்துள்ளது. நேற்று இந்தியாவையே அதிர வைத்த சம்பவம் தான் பட்டதாரி மகள்கள் இருவரை பெற்றோரோ அடித்துக் கொலை செய்த விடயம்.
தாய் பத்மஜா, தந்தை புருசோத்தம் நாயுடு இருவருமே பிரபல கல்லூரிகளில் தலைமை பேராசிரியர்கள். மூட நம்பிக்கைக்கு அடிமையான இவர்கள் பெற்று வளர்த்த மகள்களை மொட்டை அடித்து நிர்வாணமாக்கியதுடன் இருவரையும் தலையில் அடித்து கொலை செய்து மீண்டு உயிர்த்தெழுந்து வருவார்கள் என பூஜை செய்துள்ளனர்.
மகள்கள் கதறிய குரல் கேட்டதால் சந்தேகம் அடைந்த அயலவர்கள் பொலீஸாருக்கு அறிவித்த நிலையில் இருவரின் சடலத்தை மீட்ட பொலீஸார் பெற்றோரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் தங்கள் இரண்டு மகள்களும் உயிருடன் வந்து இருப்பார்கள், பொலீஸாரால் தான் இறந்து விட்டார்கள் என கூறியுள்ளனர்.
அத்துடன் ஏன் மொட்டை அடித்து நிர்வாணமாக்கினீர்கள் என்ற கேள்விக்கு எங்கள் மகள்கள் இருவரும் இறந்து மீண்டும் உயிர்த்தெழுந்து வரும் போது பிறந்த குழந்தைகள் போல் இருப்பார்கள். அவர்களுக்கு ஆடை தேவை இல்லை, பிறக்கும் குழந்தைகளுக்கு ஆடை இருப்பதில்லை, அதனால் அவர்களுக்கு ஆடை தேவை இல்லை, பூஜை முடிந்து இருந்தால் என் பிள்ளைகளுக்கு நீண்ட ஆயுள் கிடைத்திருக்கும், புதிதாக பிறந்து இருப்பார்கள் என கூறியுள்ளனர். இவர்களிடம் விசாரணையை விட இவர்களுக்கு மருத்துவ தேவை உதவி தேவைபடுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.!!